Tuesday, June 29, 2010

.net Interview Questions

Use the link to test http://www.w3schools.com/js/tryit.asp?filename=tryjs_text
The Exam Questions
1: What is the output of following code in Javascript?
var a=2+5+"6";

1)a=256
2)a=76
3)a=13
4)a=211

ans) a=76

2: Consider the following Javascript code.

var scripts=new Array();
scripts[1] = " ASP";
scripts[2] = " PHP";
scripts[3] = " JavaScript";
scripts[4] = " HTML";
var a=scripts.length;
scripts[1000]="ASPX";
var b=scripts.length;
var c=scripts[0];

What will variables (a,b,c) be?

a)(4,5,null)
b)(5,1001,undefined)
c)(5,1001,undeclared)
d)(4,5,undefined)
e)(5,6,undefined)
f)(5,1001,null)
g)(4,1001,undefined)
h)(5,1001,object)

ans: b)(5,1001,undefined)


3)According to Javascript 1.5 version, which looping structure is NOT provided?

a)for
b)while
c)foreach
d)do-while

ans: c)foreach

Q. What is the CLR?
A. Common Language Runtime

Q. What is the role of the Data Reader class in ADO.NET connections?
A. It returns a forward-only, read-only view of data from the data source when the command is executed.

Q. In a Try - Catch - Finally block, will the finally block execute if an exception has not occurred? If an
Exception has occurred?
A. Yes and yes.

Q. Does C# support multiple-inheritance?
A. No, use interfaces instead.

Q. Can you prevent your class from being inherited by another class?
A. Yes. The keyword “sealed” will prevent the class from being inherited.
free counters

அவன் :

அவ்வளவு அழகு நான்
பார்த்தது இல்லை ..
அவன் என்னை பார்த்து
சிரித்த தருணம் இன்னும்
கண்ணில் தோன்றி மறைகிறது .

அவன் என்னை கடந்த பின்
கையசைத்து ஒரு சைகை
செய்தான் - அது என்னவென்று
இன்னும் விளங்கவில்லை..!!

அவன் என்னை பார்த்து
அப்படி செய்ததும்.,
என்னை சுற்றி உள்ள
அனைவரின் கண்களும்
என்மேல் தான்...!

நானும் பதிலுக்கு கை அசைத்து
ஒரு புன்னகை சிந்தினேன்.,
ஒரு பறக்கும் முத்தமும்
கொடுத்தான்..,

என்னால் திருப்பி கொடுக்க
முடியவில்லை... - அந்த
ரெண்டு வயது பாலகனுக்கு..!!

Tuesday, March 2, 2010

பயணம் -கற்பனையே


ஐந்து வருட ஆயுளை அயல் நாட்டில் தொலைத்து
மீண்டும்
புதிய பிறவி எடுக்க பிறந்த ஊரை நோக்கி சென்ற
பயணத்தில்
பயண சீட்டும் ,
பேருந்து நடத்துனரும் ,
பள்ளி குழந்தைகள் பலர்
பாவாடை தாவணியிலும்
மாறி இருக்க

மாறாமல் இருந்தது ..நான் அமர்ந்த இருக்கையில்
படித்த காலத்தில் அவன் செதுக்கிய கல்வெட்டு
"இதயத்தில் நுழைந்த அம்புகுறி "

Friday, January 29, 2010

கண்ணம்மா

பேருந்து நிலையத்தில்
கண்ணம்மா ஒவ்வொருவரையும் பார்த்து என்னவோ நினைத்து கொண்டு இருந்தாள் .
குழந்தைக்கு பால் ஊட்டிய பொன்னியை,
யாரிடமோ குசலம் விசாரித்து கொண்டிருந்த சுப்பமாவை ,
பஸ்ஸில் படியில் தொங்கி கொண்டு சென்ற பள்ளி மாணவனை,
சாகசம் பண்ணி காசு வங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ,
கல்லூரி பெண்களின் கைப்பையை..த்டீர் என்று ஆள்ஆளுக்கு ஓடினார்கள் எங்கோ.கண்ணமாவுக்கு ஒன்றும் புரியாமல் அவளும் சேர்ந்து ஓடினாள்.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினார்கள்..யாரும் நின்று பதில் சொல்ல தயாராக இல்லை..வெள்ளிரிக்காய் காரனும் ,பூ விற்பவனும் கூடையை தூக்கி கொண்டும்,சாகசம் செய்த பச்சிளம் குழந்தையை தகப்பன் தலை மேல் தூக்கி கொண்டும்,தன்னை அறியாமல் போதையில் புரண்டு கிடந்த குடிகாரனும் வேட்டியை கட்டி கொண்டு ஓடினான்.இதற்கிடையில் கண்ணம்மாவின் கண்ணில் யார் என்றே தெரியாத கால் ஊனமுள்ள பதிமூன்று வயது மிக்க பையன் தவழ்ந்து தவழ்ந்து நடந்து வந்ததை பார்த்து அலேக்காக தூக்கிகொண்டு ஓடினாள் அந்த காதை பிளக்கும் வெடிச்சத்தம் உணராத கண்ணம்மா


அன்புடன்
இரா.சுதா

Thursday, January 28, 2010

முதல் பதிவு

ஏக்கத்துடன் முதுமை
சுட்டெரிக்கும் வெயில்
பதற்றத்துக்கும் ,பரபரப்புக்கும்
பேர் போன அந்த தேனாம்பேட்டை சிக்னல் ,
பேருந்துகளின் இரைச்சல் சத்தம் 120௦ டெசிபல்
சாலையோரத்தில்
சரித்திரம் படைத்தவரின் பெயரின் உள்ள
நிழற்குடையில்
நான்கைந்து இளைஞர்கள் ஆரவாரத்துடன்…
முரண்பாடாக
முதுமையில் முற்றிய ,
கைரேகைகள் உடல் முழுவதும் பரவி கிடக்க
ஊன்றுகோலை தோழனாக கொண்டு,
தேனாம்பேட்டை ஆலையம்மன்
மஞ்சள் பையினை கக்கத்தில் கொண்டு,
மூக்கு கண்ணாடி மூக்கில் நிலைகொள்ளாமல் ,
முகத்தை சுருக்கி நிற்கவைத்துகொண்டு…
முன்னும் பின்னும் பார்த்து ..
கடந்த ஒரு மணி நேரமாக ,
ஒவ்வொரு மானிட பதற்றுகளிடம்
உதவி கேட்டு,
ஏமாந்து போன அந்த கிழவர்
ஐந்து வயது சிறு பிள்ளை பிச்சை
பாத்திரத்துடன் சாலையை கடந்து செல்வதை
ஏக்கத்துடன் பார்க்க…………..


அன்புடன்
இரா.சுதா--