Thursday, January 28, 2010

முதல் பதிவு

ஏக்கத்துடன் முதுமை
சுட்டெரிக்கும் வெயில்
பதற்றத்துக்கும் ,பரபரப்புக்கும்
பேர் போன அந்த தேனாம்பேட்டை சிக்னல் ,
பேருந்துகளின் இரைச்சல் சத்தம் 120௦ டெசிபல்
சாலையோரத்தில்
சரித்திரம் படைத்தவரின் பெயரின் உள்ள
நிழற்குடையில்
நான்கைந்து இளைஞர்கள் ஆரவாரத்துடன்…
முரண்பாடாக
முதுமையில் முற்றிய ,
கைரேகைகள் உடல் முழுவதும் பரவி கிடக்க
ஊன்றுகோலை தோழனாக கொண்டு,
தேனாம்பேட்டை ஆலையம்மன்
மஞ்சள் பையினை கக்கத்தில் கொண்டு,
மூக்கு கண்ணாடி மூக்கில் நிலைகொள்ளாமல் ,
முகத்தை சுருக்கி நிற்கவைத்துகொண்டு…
முன்னும் பின்னும் பார்த்து ..
கடந்த ஒரு மணி நேரமாக ,
ஒவ்வொரு மானிட பதற்றுகளிடம்
உதவி கேட்டு,
ஏமாந்து போன அந்த கிழவர்
ஐந்து வயது சிறு பிள்ளை பிச்சை
பாத்திரத்துடன் சாலையை கடந்து செல்வதை
ஏக்கத்துடன் பார்க்க…………..


அன்புடன்
இரா.சுதா--

3 comments:

  1. இன்னும் அழகான, அற்புதமான கவிதை உன்னிடம் இருந்து எதிர் பார்த்து கொண்டிருக்கும் உன் கவிதை ரசிகன்............


    அன்புடன்.....
    செல்வா........

    ReplyDelete
  2. பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோரும், பெற்றோர்களால் பிச்சைக்காரர்களாக்கப்பட்ட பிள்ளைகளும் பிச்சை எடுப்பது கொடுமை..வாழ்த்துக்கள்

    ReplyDelete