Friday, January 29, 2010

கண்ணம்மா

பேருந்து நிலையத்தில்
கண்ணம்மா ஒவ்வொருவரையும் பார்த்து என்னவோ நினைத்து கொண்டு இருந்தாள் .
குழந்தைக்கு பால் ஊட்டிய பொன்னியை,
யாரிடமோ குசலம் விசாரித்து கொண்டிருந்த சுப்பமாவை ,
பஸ்ஸில் படியில் தொங்கி கொண்டு சென்ற பள்ளி மாணவனை,
சாகசம் பண்ணி காசு வங்கி கொண்டிருந்த பச்சிளம் குழந்தையை ,
கல்லூரி பெண்களின் கைப்பையை..த்டீர் என்று ஆள்ஆளுக்கு ஓடினார்கள் எங்கோ.கண்ணமாவுக்கு ஒன்றும் புரியாமல் அவளும் சேர்ந்து ஓடினாள்.உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினார்கள்..யாரும் நின்று பதில் சொல்ல தயாராக இல்லை..வெள்ளிரிக்காய் காரனும் ,பூ விற்பவனும் கூடையை தூக்கி கொண்டும்,சாகசம் செய்த பச்சிளம் குழந்தையை தகப்பன் தலை மேல் தூக்கி கொண்டும்,தன்னை அறியாமல் போதையில் புரண்டு கிடந்த குடிகாரனும் வேட்டியை கட்டி கொண்டு ஓடினான்.இதற்கிடையில் கண்ணம்மாவின் கண்ணில் யார் என்றே தெரியாத கால் ஊனமுள்ள பதிமூன்று வயது மிக்க பையன் தவழ்ந்து தவழ்ந்து நடந்து வந்ததை பார்த்து அலேக்காக தூக்கிகொண்டு ஓடினாள் அந்த காதை பிளக்கும் வெடிச்சத்தம் உணராத கண்ணம்மா


அன்புடன்
இரா.சுதா

No comments:

Post a Comment